டீ என்றாலே அதன் முதல் தேர்வாக இருக்கும் சிற்றுண்டி வடை ஆகும். டீ வடை காம்போ இந்தியாவில் மிகவும் பிரபலம் குறிப்பாக தமிழ்நாட்டில் தவிர்க்க முடியாதது.
கடலை மாவு மற்றும் உருளைக்கிழங்கு சேர்த்து செய்யப்படும் இந்த போண்டா மிகவும் சுவையாக இருக்கும். டீயுடன் சேர்த்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.
அரிசி, பருப்பு, மசாலா பொருட்கள் கொண்டு செய்யப்படுவது தட்டை.இது காரசாரமான சுவை கொண்டது. டீ-யுடன் சேர்த்து சாப்பிடலாம்.
கேரளாவின் நேந்திர சிப்ஸ் மிகவும் புகழ்பெற்றது. வாழைக்காயில் இருந்து இதை செய்கின்றனர். இதன் சுவை தனித்துவமானது.
தமிழர்களின் சிற்றுண்டிகளில் ஒன்று முறுக்கு. இதை பலரும் வீட்டிலே சிற்றுண்டியாக செய்து சாப்பிடுவார்கள்.
மரவள்ளிக் கிழங்கு கொண்டு தயாரிக்கப்படும் சிப்ஸ் இந்த மரவள்ளிக்கிழங்கு சிப்ஸ். இதன் காரமான நொறுக்குத் தீனி சுவை டீ-யுடன் சாப்பிடும்போது இதமாக இருக்கும்.
டீ குடிக்கும்போது பலரின் முதல் தேர்வாக வடை இருக்கும். உளுந்த வடையும், பருப்பு வடையுமே பலரின் முதல் தேர்வாக இருக்கும்.
இந்த பொடி இட்லி என்பது பனியார அளவில் இருக்கும். மசாலா பொருட்கள் சேர்த்து சட்னியுடன் பரிமாறப்படும். இதை கோலி இட்லி என்றும் சொல்வார்கள்.
தமிழ்நாட்டின் மற்றொரு மாலை நேர சிற்றுண்டி பணியாரம். அரிசி, உளுத்தம் பருப்பால் இதை செய்கிறார்கள். டீ-யுடன் வைத்து இதை சாப்பிடலாம்.
பொரி, தக்காளி, வெங்காயம் போட்டு செய்வது இந்த காரப்பொரி. இது காரமான சுவையுடன் இருக்கும்.