பாஸ்மதி அரிசியைப் பயன்படுத்தி கேரட் சாதம், சாதம் மற்றும் புதினா சேர்த்து புதினா சாதம் ஆகிய மூன்றையும் மூவர்ண கொடி வண்ணத்தில் அழகாக பரிமாறுவதே இந்த மூவர்ண சாதம்.
வழக்கமாக செய்யும் பாஸ்தாவுடன் தக்காளி சாஸ், மயோனஸ் மற்றும் பச்சை நிற சில்லி சாஸ் பயன்படுத்தினால் இந்த மூவர்ண பாஸ்தாவை தயாரிக்கலாம்.
வழக்கமான தோசையின் ஒரு புறத்தில் புதினா சட்னி சேர்த்து பச்சை நிறத்திலும், ஒரு புறத்தில் தக்காளிச் சட்னி சேர்த்து ஆரஞ்சு நிறத்திலும் நடுவில் வெள்ளை நிறத்தில் என தேசிய கொடி போன்ற தோற்றத்தில் இந்த தோசை இருக்கும்.
குஜராத்தின் பிரபலமான சிற்றுண்டி டோக்ளா. கேரட், பசலைக்கீரை ஆகியவற்றை சேர்த்து இதை தயாரிக்கின்றனர். மாவிலே இதை சரியான அளவில் சேர்த்து கட்லட் போன்று இதை தயாரிக்கின்றனர்.
வழக்கமான பன்னீர் டிக்காவில் பச்சை நிறத்திற்காக புதினா, கொத்தமல்லியும், சிவப்பு நிறத்திற்காக மிளகாயும் சேர்த்தால் இந்த சுதந்திர தின பன்னீர் டிக்கா தயார்.
வெள்ளை நிற ப்ரெட்களுக்கு இடையில் புதினா மற்றும் கெட்ச் அப் வைத்து தேசிய கொடி வண்ணத்தில் இந்த சாண்ட்விச் காட்சி தருகிறது.
வெள்ளை நிறம் மட்டுமின்றி ஆரஞ்சு மற்றும் பச்சை நிறத்திலும் இட்லி செய்யப்படுகிறது. இது கேரட், குங்குமப்பூ மற்றும் கேசரி பவுடர் கொண்டு சிவப்பு நிற இட்லியும், பசலைக்கீரை கொண்டு பச்சை நிற இட்லியும் செய்யப்படுகிறது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியா முழுவதும் உள்ள பேக்கரிகளில் மூவர்ணத்தில் இனிப்புகள் தயாரிக்கப்படும்.