கீரைகளில் உள்ள லுடீன், ஜியாக்ஸாந்தின்களால் உடலில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி அதிகரிக்கும். இது கண் பார்வையை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது.
சாலமன், சார்டீன் போன்ற மீன்களில் கண் ஆரோக்கியத்தை பலப்படுத்தும் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளது. வைட்டமின் டி இதில் அதிகளவு உள்ளது.
முட்டையில் லூட்டின், ஜியாக்ஸாந்தின் அதிகளவில் உள்ளது. இது வைட்டமின்களை அதிகரிக்கச் செய்யும். கண்கள் ஆரோக்கியத்திற்கு பக்கபலமாக உள்ளது.
வால்நட், பாதாம் போன்றவை கண் பார்வைக்கு நல்லது ஆகும். இவற்றில் வைட்டமின் ஈ உள்ளது. சூரியகாந்தி விதையும் மிகவும் ஆரோக்கியம் ஆகும்.
ஆரஞ்ச் போன்ற பழங்களில் சிட்ரஸ் அதிகளவில் உள்ளது. இதனால், வைட்டமின் சி அதிகரிக்கும். ஸ்ட்ராபெர்ரி போன்ற பெர்ரி பழங்களில் வைட்டமின் ஏ, சி அதிகளவில் உள்ளது.
கண் பார்வையை பலப்படுத்துவதால் சர்க்கரை வள்ளிக்கிழங்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் வைட்டமின் ஏ அதிகளவு உள்ளது.
வைட்டமின் ஏ அதிகளவு கொண்டிருக்கும் கேரட் கண் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
லூட்டின் மற்றும் ஜியாக்ஸாந்தின் அதிகம் உள்ள அவகேடோ கண் பார்வையை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது.
பிளேவனாய்டுகள் அதிகம் உள்ள டார்க் சாக்லேட் கண் பார்வையை அதிகரிக்கும்.