பொதுவாக வெண்டைக்காயை நாம் சமைத்து தான் உண்ணுவோம் சிலரோ பச்சையாக உண்பார்கள் ஆனால் வெண்டைக்காய் தண்ணீர் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? வெண்டைக்காய்களை சிறு சிறு துண்டுகளாக வெட்டி அதனை தண்ணீரில் இரவு முழுக்க ஊற வைத்தால் வெண்டைக்காய் தண்ணீர் தயார் காலையில் வெண்டைக்காய் ஊறிய தண்ணீரை குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? வெண்டைக்காயில் பல வகையான சத்துக்கள் நிறைந்துள்ளன, இந்த தண்ணீரை வெறும் வயிற்றில் குடிப்பதால் உங்கள் உடல் எளிதில் அவற்றை உறிந்து கொள்ளும் இதில் இருக்கும் நார்ச்சத்து உங்கள் உடலின் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும் இது உங்கள் பசியை குறைத்து எடை இழப்புக்கு உதவுகிறது உங்கள் எதிர்ப்புசக்தியை அதிகரித்து நோய்கள் அண்டாமல் பார்த்து கொள்ள உதவும் மருத்துவ கண்காணிப்பில் இருப்பவர்கள், மருந்துகள் உட்கொள்பவர்கள் மருத்துவரின் ஆலோசனையை பெறுவது அவசியம்