அடுப்பில் பான் வைத்து 3 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சூடாக்கவும் 40 கிராம் சின்ன வெங்காயம், 30 கிராம் பூண்டை உறித்துக் கொள்ளவும் இதை கொரகொரப்பாக அரைத்து எண்ணெயில் சேர்த்து வதக்கவும் வதங்கியதும் நறுக்கிய பீன்ஸ் சேர்த்து தேவையான அளவு கல் உப்பு சேர்க்கவும் தேவையான அளவு மிளகாய் தூள், சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும் பச்சை வாசம் போனதும், கால் டம்ளர் நீர் ஊற்றி 5 நிமிடம் மூடி வேக வைக்கவும் தண்ணீர் வற்றியதும் இறக்கலாம். அவ்வளவுதான் சுவையான பீன்ஸ் உப்பேறி தயார்