நான்ஸ்டிக் பேன்களை பாதுகாக்க இந்த டிப்ஸை பின்பற்றுங்கள்..!



நான்ஸ்டிக் பேன்களை பயன்படுத்தும் முன்னர் அதன் மீது எண்ணெய் தேய்க்கவும்



அவ்வாறு எண்ணெய்யை தேய்த்துவிடுவதால் அது கோட்டிங் போகாமல் பாதுகாக்கப்படுகிறது



நான்ஸ்டிக் பேன் விற்கும்போதே அத்துடன் உட்டன் ஸ்பேடுலா எனப்படும் மரக்கரண்டி தருவார்கள்



ஆனால் நம்மில் பலரும் அதை எடுத்து ஓரமாக வைத்துவிட்டு நம் வீட்டில் உள்ள எவர்சில்வர் கரண்டிகளைப் பயன்படுத்துவோம்



நான்ஸ்டிக் பாத்திரங்களைப் பயன்படுத்தி சமைக்கும்போது அடுப்பின் தீயை சிம்மில் வைத்து பயன்படுத்தலாம்



இதனால் பாத்திரம் சீராக சூடேறும். இது நான்ஸ்டிக் பாத்திரத்தின் நிறம் மாறாமல் பாதுகாக்கும்



நான்ஸ்டிக் பேனை சுத்தம் செய்வதில் கவனம் தேவை. பேனை பயன்படுத்தியவுடன் அதன் மீது உடனே குளிர்ந்த நீரை ஊற்றக் கூடாது



இது பேனில் தெர்மல் ஷாக் ஏற்படச் செய்யும். இதனால் பேனின் கோட்டிங் வெகு சீக்கிரமே போய்விடும்



சமைத்து சுத்தம் செய்த பின்னர் நான்ஸ்டிக் பாத்திரங்களை அதற்கென தனியான இடத்தில் வைக்கவும்