உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல், தலைமுடியின் வளர்ச்சிக்கும் வெந்தயம் உதவுகிறது



வெந்தயம், முடி வளர்ச்சிக்கு பெரிதும் பங்காற்றி வருகிறது



வெந்தய விதைகளில் வைட்டமின்கள் A, C மற்றும் K அதிகளவில் நிறைந்துள்ளது



சின்னஞ்சிறு விதையில், முடிக்குத் தேவைப்படும் புரதங்கள் மற்றும் ஃபோலிக் அமிலம் அதிகளவில் நிரம்பியுள்ளது



வெந்தயத்தை பொடியாக அரைத்து இதனுடன் வாழைப்பழம், தேன் சேர்த்து தலையில் தடவிக் கொள்ளலாம்



30 நிமிடம் கழித்து ஷாம்பூவால் உங்களின் தலைமுடியைக் கழுவ வேண்டும்



வெந்தயம், தேங்காய் எண்ணெய், செம்பருத்திப்பூ தூள் சேர்த்த கலவையை தடவலாம்



இதை உச்சந்தலையில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். 20 முதல் 30 நிமிடங்கள் கழித்து, ஷாம்பூ போட்டு முடியை அலச வேண்டும்



வெந்தயபொடி ,தயிர், ஆமணக்கு எண்ணெய் மற்றும் கற்றாழை ஜெல் ஆகியவற்றை தலா 1 டீஸ்பூன் சேர்த்துக் கொள்ள வேண்டும்



இது நீளமான முடியை பெற உதவும்