உடற்பயிற்சி செய்வதால், உடல் உழைப்பு தேவைப்படும் வேலை செய்தால் வியர்வை வரும்



ஆனால் சிலருக்கு எப்போதும் வியர்வை வந்துக்கொண்டே இருக்கும்



ஒரு சிலருக்கு ஏசியில் இருந்தால் கூட வியர்வை வரும்



இந்த நிலையை ஆங்கிலத்தில் 'Hyperhidrosis’ என்று அழைப்பர்



பொதுவாக வியர்வைக்கு வாசனை இருக்காது



அவற்றில் உப்பு சுவை மட்டுமே காணப்படும்



அக்குள், தொடை போன்ற இடுக்குகளில் இருந்து வரும் வியர்வையே நாற்றம் அடிக்கும்



அந்த இடங்களை சுத்தமாக வைப்பது அவசியம்



வெறும் வயிற்றில் அடிக்கடி டீ காஃபி குடித்தால் துர்நாற்றம் வீசும் என சொல்லப்படுகிறது



டயட்டில் பீட்ரூட் சேர்த்துக் கொண்டால் துர்நாற்றம் குறையலாம்