மனம் உருகி போஸ்ட் செய்த நடிகை தமன்னா! தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை தமன்னா பாட்டியா ரவி கிருஷ்ணன், இலியானாவுடன் இணைந்து கேடி படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் சிறுத்தை, கோ, வேங்கை, வீரம் போன்ற படங்களில் நடித்து இளைஞர்களின் மனதில் இடம்பிடித்தார் இந்நிலையில், 9 ஆண்டுகளை நிறைவு செய்த பாகுபலி படத்தின் முதல் பாகத்தை பற்றி நெகிழ்ச்சியாக இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார் இயக்குநர் ராஜமெளலியுடன் இணைந்து பணியாற்றுவது கனவாக இருந்தது என குறிப்பிட்டு இருந்தார் அந்த ஆசை பாகுபலி படத்தின் மூலம் 9 வருடங்களுக்கு முன்பு நிஜமாக மாறியது - தமன்னா அற்புதமான படக்குழுவுடன் பணியாற்றியது மனதிற்கு நிறைவாக இருந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார் பாகுபலி போன்ற பிரம்மாண்ட படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்த தருணத்தை எப்போதும் மனதில் கொள்வேன் - தமன்னா படத்தை பார்த்து அன்பை பரிமாறிய ரசிகர்களுக்கு அப்போதும் இப்போதும் நன்றிக்கடன் பட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்