'Chhaava' திரைப்படம் ரூ.600 வசூல் சாதனை!
லஷ்மண் உடேகர் இயக்கியிருக்கும் திரைப்படம் ‘Chhaava'. ஏர்.ஆர். ரஹ்மான் பின்னணி இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாகி இதுவரை ரூ.400 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்துள்ளது.
சத்ரபதி சிவாஜியின் மகன் சம்பாஜி மகாராஜ் மற்றும் முகலாயர்களுக்கு இடையிலான போரை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது.
சம்பாஜி மன்னரின் மனைவி ஏஸுபாயாக ராஷ்மிகா நடித்துள்ளார். இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்தப் படத்தில் விக்கி கெளசல் நடிப்பும் பெரிதும் பாரட்டப்பட்டது. ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது.
இது Netflix-ஸில் அனைத்து மொழிகளிலும் ஏப்ரல் 11 ஆம் தேதி வெளியாகியது.
இந்தப் படம் வெளியாகிய 10-வது வாரத்தில் ரூ.600 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'Chhaava' தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகியது.
விக்கி கெளசல், சத்திரபதி சிவாஜி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற படம்.