பென்ஸ் மற்றும் சூரியா 45 படங்களில் இசையமைப்பாளராக சாய் அபியங்கர். சாய் அபியங்கர் பாடகர் மற்றும் இசையமைப்பாளர் ஆவார். அவர் பின்னணி பாடகர் திப்பு மற்றும் ஹரிணி ஆகியோரின் மகன். இவர் 'கட்சி சேர' என்ற பாடல் மூலம் மிகவும் புகழ்பெற்றார். இந்த பாடல் யூடியூப்பில் 193 மில்லியன் பார்வைகளைக் குவித்தது ’கச்சி சேர' பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அவரது அடுத்த சிங்கிள் 'ஆச கூட' பாடலும் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த பாடல் யூடியூப்பில் 173 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றது. LCU வின் பென்ஸ் திரைப்படத்தில் இசையமைப்பாளராக சாய் அறிமுகமாகிறார். அவரது பிறந்தநாளான நவம்பர் 4ம் தேதி படக்குழு இதை உறுதி செய்தது. ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 படத்திலும் சாய் அபியங்கர் இசையமைப்பாளராக இணைந்துள்ளார்.