ராதிகா மெர்ச்சண்டின் வெட்டிங் லுக்ஸ்! அனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சண்டிற்கும் திருமணம் நடந்து முடிந்தது கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் பிரபலங்கள் பலர் விழாவில் கலந்து கொண்டு புதுமண தம்பதிகளை வாழ்த்தினர் அபு ஜானி சந்தீப் கோஸ்லா வடிவமைத்த ஆடைகளை ராதிகா மெர்ச்சண்ட், இஷா அம்பானி, நிதா அம்பானி உள்ளிட்டோர் அணிந்தனர் குஜராத்தி கலாச்சாரத்தில் மணப்பெண்கள் அணியும் சிவப்பு - வெள்ளை நிற காம்போவிலான ஆடையை ராதிகாவும் அணிந்திருந்தார் ஐவரி கட் வொர்க் கொண்ட நீண்ட காக்ராவுடன் 5 மீட்டர் அளவில் அலங்கரிக்கப்பட்ட துணியை தலையில் அணிந்திருந்தார் திருமணத்தின் போது ராதிகா, தனது பாட்டி, அம்மா ஆகியோர் அவர்கள் திருமணத்திற்கு அணிந்த பாரம்பரிய நகைகளை அணிந்திருந்தார் ஆடைக்கு ஏற்ற பளிச் மேக்-அப் குறையில்லாமல் அவருக்கு பொருத்தமாக இருந்தது சிவப்பு நிற துப்பட்டாவை அணிந்து கதைகளிலும் சினிமாவிலும் வரும் இளவரசிகளை போல காட்சியளித்தார்