’Test’ திரைப்படம் - ரசிகர்களின் பாரட்டைப் பெற்றதா?

Published by: ஜான்சி ராணி

இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. பிரபல பாடகி சக்தி ஸ்ரீ கோபாலன் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

டெஸ்ட் கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகியிருக்கும் திரைப்படம் இது. மாதவன், நயன்தாரா, சித்தார்த், மீரா ஜாஸ்மின் ஆகியோர் நடித்துள்ளனர்.

டெஸ்ட் கிரிக்கெட், சூதாட்டம், நடுத்தர வாழ்க்கை உள்ளிட்டவற்றை மையமாக வைத்து உருவாகியுள்ளது. நயன்தாராவின் நடிப்பு பாராட்டுக்களை பெற்று வருகிறது.

இந்தப் படத்தின் முன்னணி நடிகர்கள் நடித்திருப்பதால் பார்க்கும்படி இருப்பதாக தெரிவித்துள்ளர். அதோடு, திரைக்கதை, கதை இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் என்று சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார் ஒருவர்.

டெஸ்ட் திரைப்படத்தில் மாதவன், நயன்தாரா, சித்தார்த் ஆகியோரின் நடிப்பை பாராட்டுவதாக ஒருவர் எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மீரா ஜாஸ்மின் 10 ஆண்டுகளுக்குப் பிறகு சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளார்.

திரைக்கதையை இன்னும் சுவாரஸ்யமாக உருவாக்கியிருக்கலாம் என்று தெரிவித்து வருகின்றனர்.

டெஸ்ட் திரைப்படம் ஓ.டி.டி.யில் வெளியாகியுள்ளது. கலவையான விமர்சங்களை பெற்று வருகிறது.