சபரி பாரி இருவரும் நண்பர்கள். ஒரு விபத்தில் இருந்து சபரியை காப்பாற்றி தன் உயிரை விடுகிறார் பாரி. அதன் பின் நண்பனின் கனவை தன்னுடைய கனவாக எடுத்துக் கொள்கிறார் சபரி. அந்த கணவை நிறைவேற்றினாரா ? இல்லையா? என்பதே மீத கதை
படத்தின் முதல் பாதி பள்ளி பருவத்தில் செல்கிறது. இரண்டாம் பாதி இமயமலைக்கு ரோட் ட்ரிப் சென்றுவந்த அனுபத்தை தருகிறது
மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு படத்திற்கு பிளஸ் ஆக அமைந்தது
மேலும் கதிஜா ரஹ்மானின் பின்னணி இசை பக்கபலமாய் அமைந்தது
படத்தில் சில இடங்களில் லாஜிக் ஓட்டைகள் உள்ளன
படத்தில் வசனங்கள் அழுத்தமாக இருந்தாலும் உணர்ச்சிப் பூர்வமாக வெளிப்படவில்லை
வாழ்க்கைக்கான அர்த்தத்தை தேடுவதுதான் கதை என்றால் அதனை இன்னும் எதார்த்தமாக எடுத்திருக்கலாம்
படத்தில் கூறப்படும் விஷயங்கள் வெறும் வசனமாக மட்டும் இருப்பது மிகப்பெரிய குறையாக தெரிகிறது
ஒரு சில குறைகள் இருந்தாலும் கும்படுத்துடன் தியேட்டருக்கு சென்று பார்க்கலாம்