41 வயதிலும் அழகு.. நயன்தாராவின் பிட்னெஸ் சீக்ரெட் இதுதான்!

Published by: பேச்சி ஆவுடையப்பன்

நயன்தாரா அறிமுகமான காலக்கட்டத்தில் அதிக எடை கொண்ட நடிகையாக இருந்தார். காலப்போக்கில் உடல் எடையை பராமரித்து பலருக்கு ஆச்சரியம் அளித்தார்

அழகும், இளமையும் கொண்ட நயன்தாரா தனது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு என்ன காரணம் என்பதை தெரிவித்துள்ளார்.

அதாவது நீங்கள் வசிக்கும் இடத்துக்கு சொந்தமான உணவை எப்போது சாப்பிட வேண்டும். இது ஆரோக்கியம், சரும பாதுகாப்பு, தலைமுடி பராமரிப்புக்கு உதவும்

அடிக்கடி நீரேற்றமாக உடலை வைத்துக் கொள்ள வேண்டும். தண்ணீர், ஜூஸ் என எதுவேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.

அழகின் ரகசியமாக உதடுகளை சமமாக மாற்ற நான் சிறிது பவுண்டேஷனைப் பயன்படுத்துகிறேன். பின்னர் லிப் லைனர் பயன்படுத்துகிறேன். ஒருபோதும் லிப்ஸ்டிக் பயன்படுத்துவதில்லை

சத்து நிறைந்த ஒரு சீரான உணவுதான் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு முக்கியம் என்பதை நினவில் கொள்ளுங்கள்.

சினிமாவில் நடிப்பது மட்டுமல்லாமல் அழகு, அரோக்கியம் தொடர்பான பொருட்களையும் அவர் விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

நயன்தாரா நடிப்பில் அடுத்ததாக தமிழில் மண்ணாங்கட்டி, முக்குத்தி அம்மன் 2, ஹாய், ராக்காயி ஆகிய படங்கள் வெளியாகவுள்ளது