டிராகன் திரைப்படத்தின் டிவிட்டர் விமர்சனம்!

Published by: ஜான்சி ராணி

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த  டிராகன் படம் உலகம் முழுவதும் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 

கோமாளி , லவ் டுடே என அடுத்தடுத்த இரு பெரிய ஹிட் படங்களைக் கொடுத்த பிரதீப் ரங்கநாதன் . ஓ மை கடவுளே படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து டிராகன் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த படத்தில் கயாடு லோஹர், அனுபாமா பரமேஷ்வரன், ஜார்ஜ் மேரியன், இந்துமதி மணிகண்டன், கே.எஸ்.ரவிக்குமார், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், வி.ஜே.சித்து, ஹர்ஷத் கான், சபரி பிரசாந்த் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

படத்தின் முதல் பாதி நன்றாக இருப்பதாகவும் பிரதீப் ரங்கநாதனின் நடிப்பு முந்தைய படங்களைக்காட்டிலும்  மெருகேறி  இருப்பதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

இந்தப் படத்தில் காலேஜ் கதை எப்போதும் இப்படிதான் இருக்குமா என்பதை போல இருக்கிறது.

படத்தின் கதை யூகிக்கக்கூடியதாக இருந்தாலும்  படம் அவ்வளவு சலிப்பை ஏற்படுத்தவில்லை என சில ரசிகர்கள் தெரிவித்துள்ளார்.

பிரதீப் ரங்கநாதன் நடிப்பு சூப்பராக இருப்பதாக சொல்லியிருக்கிறார்கள்.

வி.ஜே.சித்து நகைச்சுவை என்பது கிரிஞ்ச் ஆக இருப்பது படத்தின் மிகப்பெரிய குறைபாடு.

முதல் பாதி திரைக்கதை இன்னும் சுவாரஸ்யமாக இருந்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.