ஆனந்த் நாராயண் இயக்கத்தில் சந்தானம் நடித்து இன்று வெளியாகியுள்ள படம் இங்க நான் தான் கிங்கு

திருமணத்திற்காக கடன் வாங்கி வீடு கட்டி, அந்த வீட்டு கடனை திருமணம் மூலமாகவே எப்படி அடைக்கிறார் சந்தானம் என்பதை கதை

மனோபாலா, தம்பி ராமையா, மாறன், ஷேசு, முனீஸ்காந்த், பால சரவணன் என பலர் நடித்துள்ளனர்

இந்த படத்தில் சந்தானம், தம்பி ராமையா, பால சரவணன் ஆகியோரின் காமெடி சிறப்பாக உள்ளது

டி.இமானின் இசை சிறப்பாக இல்லாவிட்டலும் ஓரளவு பரவாயில்லை என்றுதான் கூறமுடிகிறது

சந்தானத்தின் முந்தய காமெடி படங்களை ஒப்பிடுகையில் இந்த படம் சிறப்பாக அமைந்துள்ளது

படத்தின் முதல் பாதியில் உள்ள வேகம் இரண்டாம் பாதியில் இல்லை

படத்தில் சில இடங்களில் லாஜிக் மிஸ்டேக்குகளை குறைத்திருக்கலாம்

படத்தின் டைட்டிலுக்கும், கதைக்கும் என்ன சம்பந்தம் உள்ளது என்றுதான் புரியவில்லை

படத்தில் சில குறைகள் இருந்தாலும், குடும்பத்துடன் பார்க்க ஏற்ற படம்

Thanks for Reading. UP NEXT

ஃபஹத் ஃபாசிலின் மறக்க முடியாத கதாபாத்திரங்கள்!

View next story