நடிகை சமந்தா இன்று 36வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் மாடலிங்கில் ஆர்வம் கொண்ட சமந்தாவை உள்ளூர் விளம்பரங்களில் பார்த்திருப்போம் பாணா காத்தாடி படம் தான் சமந்தாவின் தமிழ் சினிமா அறிமுகமாக அமைந்தது சமந்தா நடித்த “நான் ஈ” படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது தமிழில் விஜய், விக்ரம், சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்துள்ளார். 2018 ஆம் ஆண்டு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்துக் கொண்ட அவர், 2021ல் பிரிந்தார் மணமுறிவுக்குப் பின் புஷ்பா படத்தில் “ஓ சொல்றியா” பாடல் மூலம் பரபரப்பை ஏற்படுத்தினார் தொடர்ந்து வெப் சீரிஸ்கள், ஹீரோயின்களை மையப்படுத்திய கதைகளில் நடித்து வருகிறார் சமீபகாலமாக திரைப்பட விழாக்களுக்கு வரும் சமந்தாவின் ஆடைகள் வைரலாகி வருகிறது இளம் வயதினரின் ஸ்டைலிஸ் ஐகான விளங்கும் சமந்தாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!