அமிதாப் டூ மம்மூட்டி ரஜினியுடன் நடித்த சூப்பர்ஸ்டார்கள் தெலுங்கு திரையுலகின் சூப்பர்ஸ்டாரான சிரஞ்சீவி ரஜினியுடன் இணைந்து ராணுவ வீரன், மாப்பிள்ளை படத்தில் நடித்துள்ளார். கன்னட சூப்பர்ஸ்டாராக திகழ்ந்த நடிகர் விஷ்ணுவர்தன் ரஜினியுடன் விடுதலை, ராகவேந்திரா என ஏராளமான படங்களில் நடித்துள்ளார். மோகன்லால் ரஜினியுடன் இணைந்து ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார். கன்னட பிரபலம் ராஜ்குமார் ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் நடித்துள்ளார். இந்தி சூப்பர்ஸ்டார் அமிதாப்பச்சன் ரஜினியுடன் தமிழில் வேட்டையனில் நடித்துள்ளார். ஷாருக்கான் ரஜினியுடன் இணைந்து ரா - ஒன் படத்தில் நடித்துள்ளனர். ரஜினி - கமல் இணைந்து 16 வயதினிலே, இளமை ஊஞ்சலாடுகிறது என ஏராளமான படங்கள் நடித்துள்ளனர். ரஜினி - மம்மூட்டி இணைந்து தளபதியில் நடித்துள்ளனர். நடிகர் திலகம் சிவாஜி ரஜினியுடன் படையப்பா, படிக்காதவன், விடுதலை என ஏராளமான படங்கள் நடித்துள்ளார் ரஜினி - அக்ஷய் குமார் இணைந்து எந்திரன் 2.0ல் நடித்துள்ளனர்.