பிரபல பாடகி துவா லிபா தனது பிறந்தநாளை நெருங்கிய காதலன் கால்ம் டர்னருடன் கொண்டாடினார்.
தனது பிறந்தநாளை முன்னிட்டு அவர் அடர் சிவப்பு நிற ஆடை அணிந்தார்
ஹாலிவுட்டின் டாப் 10 பாப் பாடகர்களின் வரிசையில் வரக்கூடியவர் துவா லிபா
இவரது பல பாடல்கள் இந்திய ரசிகர்களிடம் பெரியளவில் வைரலாகியுள்ளன
துவா லிபாவின் இசை நிகழ்ச்சிகள் பெயர் போனவை. இந்த நிகழ்ச்சியில் துவா லிவாபின் கவர்ச்சிகரமான நடனம் ரசிகர்களை கவர்ந்த ஒன்று
லண்டனில் பிறந்த துவா லிபா அல்பேனியா நாட்டை பூர்வீகமாக கொண்டவர்
30 வயதேயான துவா லிபா ரூ 300 கோடிக்கு சொத்துக்களை சேர்த்துள்ளார்
தனது பிறந்த நாளில் காதலர் கால்ம் டர்னருடன் எடுத்த இனிமையான செல்ஃபி, இருவரும் சிரித்தபடி இருந்தனர், இந்த தருணத்தை மிகவும் மறக்கமுடியாததாக ஆக்கியது.
துவா லிபாவுக்கு அவரது காதலருக்கு இந்த ஆண்டு திருமணம் நிச்சயிக்கப்பட்டது