தனுஷின் இயக்குனர் பயணம்!
சினிமா துறையில் பல திறமைகள் கொண்டவர் நடிகர் தனுஷ்.
அதிரடியான திரைப்படங்கள் மூலம் வெற்றி பயணத்தில் இருக்கும் இவர், தற்போது இயக்குனர் அவதாரம் எடுத்து இருக்கிறார்.
2017லில், வெளியான ‘பவர் பாண்டி’ படத்தில் இயக்குனராக அறிமுகம் ஆனார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
2024ல், வெளியான ‘ராயன்’ படத்தை இயக்கி, நடித்தும் உள்ளார்.
தற்போது, ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தை இயக்கி இருக்கிறார். இந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அடுத்து ‘இட்லி கடை’ திரைப்படத்தை இயக்கி வருகிறார் தனுஷ்.
கிராம சூழலில் உருவாகும் ‘இட்லி கடை’ திரைப்படம் ஏப்ரலில் வெளியாக உள்ளது.