41வது பிறந்தநாளை கொண்டாடிய தனுஷ்! கஸ்தூரி ராஜாவின் இளைய மகனான வெங்கடேஷ் பாபுவிற்கு, அண்ணன் செல்வராகவனின் துள்ளுவதோ இளமை படம் தனுஷ் என்ற அடையாளத்தை கொடுத்தது தனது முதல் படத்தில் பல விமர்சனங்களை எதிர்கொண்டு, அடுத்தடுத்த படங்களில் அடுத்தக்கட்ட நடிப்பை வெளிப்படுத்தினார் இப்படியாக புதுப்பேட்டை, பொல்லாதவன், யாரடி நீ மோகினி, ஆடுகளம், மயக்கம் என்ன, 3, மரியான் என வரிசையாக பல படங்களில் நடித்து வந்தார் இதற்கு இடையில் சோனம் கபூருடன் இணைந்து ராஞ்சனா எனும் ஹிந்தி படத்தில் கிடைத்த வாய்ப்பையும் பயன்படுத்திக்கொண்டார் தனுஷின் 25 படமாக வேலையில்லா பட்டதாரி அமைந்தது அதன் பிறகு வட சென்னை, அசுரன், திருசிற்றம்பலம், கேப்டன் மில்லர் என விதவிதமான கதை களம் கொண்ட படத்தில் நடித்து மனதில் பதியும் கதாபாத்திரங்களில் நடித்தார் நடிப்பதுடன் நிறுத்திக்கொள்ளாமல் பாடகராகவும், தயாரிப்பாளராகவும் மின்னிவருகிறார் தனுஷ் ஹாலிவுட்டிலும் இவருக்கான அழைப்பு வந்தது உலகமே கொண்டாடும் புகழ்பெற்ற நடிகர்களுடன் தி கிரே மேன் என்ற படத்தில் நடித்தார் இன்று பிறந்தநாள் காணும் தனுஷுக்கு சமூக வலைதளங்களில் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்