2024 ஆம் ஆண்டுக்கான 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (மே 10) வெளியாகின



ஒட்டுமொத்தமாக 91.55 சதவீத மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்



தேர்ச்சி விகிதத்தில் மாவட்ட அளவில் அரியலூர் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது



அதேபோல வேலூர் மாவட்டம் கடைசி இடத்தில் உள்ளது



அதிகபட்சமாக ஆங்கிலப் பாடத்தில் 99.15 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்



குறைந்தபட்சமாக சமூக அறிவியல் பாடத்தில் 95.74 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்



கணிதப் பாடத்தில் அதிகபட்சமாக, 20,691 பேர் நூற்றுக்கு நூறு பெற்றுள்ளனர்



தமிழ் பாடத்தில் 8 பேரும், ஆங்கிலப் பாடத்தில் 415 பேரும் சென்ட்டம் அடித்துள்ளனர்



அறிவியல் பாடத்தில் 5,104 பேரும் சமூக அறிவியல் பாடத்தில் 4,428 பேரும் சென்ட்டம் அடித்துள்ளனர்