மே 5ஆம் தேதி நாடு முழுவதும் நீட் நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது 3 மணி நேரம் 20 நிமிடங்களுக்கு அதாவது 200 நிமிடங்களுக்கு நீட் தேர்வு நடைபெற உள்ளது தேர்வு தொடங்குவதற்கு 2 மணி நேரம் முன்னதாக மதியம் 12 மணிக்கு தேர்வு மையங்கள் திறக்கப்படும் பகல் 1.30 மணிக்குப் பிறகு தேர்வு மையத்துக்குள் வர, தேர்வர்களுக்கு அனுமதி இல்லை தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் தேர்வர்கள் சென்று அமர வேண்டும் தேர்வு மையத்தில் அனுமதிச் சீட்டைக் காட்டிய பிறகே தேர்வர்கள், தேர்வு அறைக்குள் செல்ல முடியும் அனுமதிச் சீட்டு இல்லாத தேர்வர்கள், தேர்வு மையத்துக்குள் அனுமதிக்க மாட்டார்கள் தேர்வு நடைபெறும்போதே, மைய கண்காணிப்பாளர்கள் உங்களின் ஹால் டிக்கெட்டைப் பரிசோதிக்கலாம் தேர்வு முடியும்வரை, தேர்வர்கள் தங்களின் இடத்தையோ, தேர்வு மையத்தையோ விட்டு வெளியே செல்ல அனுமதி இல்லை கையில் உள்ள ஓஎம்ஆர் தாளை, தேர்வு மைய அதிகாரியிடம் அளிக்காமல், தேர்வு மையத்தை விட்டு செல்லக்கூடாது