பூண்டு ஊறுகாய்,சுவைக்கு மட்டுமல்லாது,உடலுக்கும் ஆகச்சிறந்த நன்மைகளை தரும்.



தோல் உரித்த அரை கிலோ பூண்டை எடுத்துக் கொள்ள வேண்டும்.



இதை நீராவியில் இட்லிக்கு அவிப்பது போல அவித்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.



நல்லெண்ணெய் சிறிது தாளிப்பதற்கு எடுத்துக் கொண்டு அதில் கடுகை இட்டு வெடித்து வந்ததும்,எடுத்து ஆற வைத்துக் கொள்ள வேண்டும்.



ஆவியில் அவித்து ஆற வைத்த பூண்டில் மிளகாய் தூள்,மஞ்சள் தூள், சீரகத்தூள், பெருங்காயத்தூள் மற்றும் உப்பை சேர்க்கவும்.



இந்த கலவையில் கொதிக்க வைத்த எண்ணெயை ஊற்றி நன்றாக கிளறி விடவும்.



பூண்டு ஊறுகாயை காற்று போகாத கொள்கலன்களில், அடைத்து,ஆக குறைந்தது 3 மாதங்கள் பயன்படுத்தலாம்.



மூன்று மாதங்களுக்குப் பிறகு, வெயில் படும்படியோ அல்லது ஒரு பாத்திரத்தில் இந்த ஊறுகாயை இட்டு சூடு செய்து பயன்படுத்தலாம்.



சளி குணமாக்கும் பூண்டு ஊறுகாய்.



இதயத்திற்கு இதமான பூண்டு



இரத்த சுத்திகரிப்பானாக செயலாற்றும் பூண்டு.