சமையலுக்கு மட்டுமின்றி பேக்கிங் சோடாவை பலவிதங்களிலும் நாம் பயன்படுத்தலாம்



ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர், ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து பழங்கள் மற்றும் காய்கறிகளை சுத்தம் செய்யலாம்



கார்ப்பெட்களில் சூடான நீர் கலந்த பேக்கிங் சோடா தெளித்து ஒரு இரவு முழுவதும் ஊறவைத்தால் கறை நீங்கும்



ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடா கலந்து குடிப்பதால் நெஞ்செரிச்சல் பிரச்சனை தீரும்



பேக்கிங் சோடாவுடன் தண்ணீரைக் கலந்து ஒரு நாளைக்கு மூன்று முறை குடித்தால் தொண்டை வலி சரியாகும்



வெந்நீர் கலந்த பேக்கிங் சோடாவை அக்குள் பகுதியில் தடவி 30 நிமிடங்களுக்குப் பின் கழுவினால் கருமை நீங்கும்



பேக்கிங் சோடாவை தண்ணீரில் கலந்து வாய் கொப்பளித்தால் துர்நாற்றம் நீங்கும்



பேக்கிங் சோடாவுடன் எசன்ஷியல் ஆயிலைக் கலந்து ஏர் ப்ரெஷ்னர் ஆக பயன்படுத்தலாம்



துணி துவைக்கப் பயன்படும் சோப்பில் பேக்கிங் சோடாவை சேர்த்தால் கறை நீங்கி ஆடைகள் வெண்மையாக மாறும்



பேக்கிங் சோடாவைத் தெளித்து 20 நிமிடங்களுக்குப் பின் ஸ்கிரப்பிங் செய்தால் பாத்ரூம் கறைகள் நீங்கும்