Dhanush: மீண்டும் இயக்குநராகும் தனுஷ்...மகிழ்ச்சியில் ரசிகர்கள்...படத்தை தயாரிக்கப் போவது இந்த நிறுவனமா? தனுஷ் மீண்டும் படம் இயக்கப்போவதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள தனுஷ் நடிப்பில் இந்தாண்டு மட்டும் 5 படக்கள் வெளியாகியுள்ளது இதனைத் தொடர்ந்து வாத்தி படம் டிசம்பர் 2 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளன மற்றொரு படமான கேப்டன் மில்லரும் முழு வீச்சில் தயாராகி வருகிறது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் ஏற்கனவே பாடகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் என பல துறைகளில் அசத்தி வரும் தனுஷ் பவர் பாண்டி என்ற படத்தை இயக்கியிருந்தார் இந்நிலையில் தனுஷ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது அதில் மீண்டும் படம் இயக்கும் முயற்சியில் தனுஷ் களமிறங்கியுள்ளதாக கூறப்படுகிறது ஏற்கனவே சமீபத்தில் நானே வருவேன் படத்தின் கதையை தனுஷ் எழுதியிருந்தார் மேலும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது