டேவிட் மில்லர் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் களத்தில் அதிரடி காட்டக் கூடியவர். இவருக்கு ‘கில்லர் மில்லர்’ என்ற செல்லப்பெயர் உண்டு. அணி தோல்வியின் விளிம்பில் இருக்கும்போது ஒற்றை ஆளாய் ஆட்டத்தை மாற்றக் கூடியவர். இந்தியாவுக்கு எதிராக 31 பந்துகளில் 64* ரன்கள் எடுத்திருக்கிறார். ஐ.பி.எல். தொடரில் 38 பந்துகளில் 101 ரன்கள் எடுத்தார். வங்கதேசத்துக்கு எதிரான டி-20 போட்டியில் 36 பந்துகளில் 101* ரன்கள் எடுத்து சாதனை படைத்திருக்கிறார். சிறந்த பேட்ஸ்மேன். ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்படுபவர். உலகக் கோப்பையும் இவரது அதிரடி தொடர்கிறது.