இந்தியா- நெதர்லாந்து அணிகள் டி20 போட்டிகளில் மோதுவது இதுவே முதன்முறை

டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது

முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 179 ரன்களைக் குவித்தது

180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து விளையாடியது

நெதர்லாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் எடுத்தது

தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய விக்ரம்ஜித் சிங்கை 1 ரன்னில் வீழ்த்தினார் புவனேஷ்வர் குமார்

அடுத்து வந்த மேக்ஸை 16 ரன்களில் ஆட்டமிழக்கச் செய்தார், அக்சர் படேல்

அடுத்த வந்த பாஸ் டி லீடே, காலின் அக்கர்மேன் ஆகியோரும் அஸ்வினால் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்தது நெதர்லாந்து அணி

இந்தியா 56 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது