டி20 உலகக் கோப்பை தற்போது நடைபெற்றுவருகிறது

இந்தியா அணி முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து விளையாடி த்ரில் வெற்றி பெற்றது

இதற்கடுத்து இந்திய அணி நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் விளையாடி வெற்றி பெற்றது

இப்போட்டியில் விராட் கோலி 62 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்

இதன்மூலம் டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இடம்பிடித்தார்

கிறிஸ் கெயிலை பின்னுக்கு தள்ளி விராட் கோலி அசத்தியுள்ளார்

டி20 உலகக் கோப்பை போட்டிகளில் கெயில் அடித்திருந்த 965 ரன்களை விராட் கோலி தாண்டியுள்ளார்

விராட் கோலி தற்போது டி20 உலகக் கோப்பை தொடர்களில் 989 ரன்கள் அடித்துள்ளார்

1016 ரன்களுடன் மகேலா ஜெயவர்தனே முதல் இடத்தில் உள்ளார்

இரண்டாம் இடத்தில் விராட் கோலியும், 965 ரன்களுடன் கிறிஸ் கெயில் மூன்றாம் இடத்தில் உள்ளார்