உடலில் டாட்டூ குத்துவதனால் ஏற்படும் பக்க விளைவுகள்.. மிகவும் ஃபேஷனாக பரவி வரும் இந்த டாட்டூ மோகத்தினால் உடல் நலம் பாதிக்கப்படலாம் பயன்படுத்திய ஊசியை மறுமுறை உபயோகிக்கும் போது நோய் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது எச்.ஐ.வி நோய்த்தொற்று கூட பரவ வாய்ப்புள்ளது பல வண்ணங்களில் டாட்டூக்கள் குத்திக்கொள்ள இரசாயன சாயங்கள் உபயோகிக்கப்படுகின்றன சரும அழற்சிகள் ஏற்படலாம் டாட்டூ குத்திக்கொண்ட இடத்தில் சூரிய ஒளிப்படும் போது தான் அழற்சி அதிகமாகிறது டாட்டூக்கள் குத்துவதனால் தோலில் வடுக்கள் வருகிறது ஊசியில் தங்கியிருக்கும் பாக்டீரியாக்கள் மூலமாக சரும தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம் இருக்கிறது எம்.ஆர்.ஐ ஸ்கேன்னிங் செய்யும் பட்சத்தில் உங்களுக்கு டாட்டூ குத்திய இடத்தில வீக்கமும், எரிச்சலும் ஏற்படலாம்