ஹர்திக் பாண்ட்யா கேப்டன்சிக்கு நோ வீரர்கள் பிசிசிஐ-யிடம் சொன்னது என்ன?

Published by: விஜய் ராஜேந்திரன்

ஹர்திக் பாண்ட்யா டி20 கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டதற்கான

காரணம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது

ஹர்திக் பாண்ட்யா இந்திய அணியின் தவிர்க்க முடியாத

வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக உள்ளார்

16 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியின்

கேப்டனாக செயல்பட்டு, 12 வெற்றிகளை ஈட்டியுள்ளார்

ரோகித் சர்மாவிற்கு பிறகு, ஹர்திக் இந்திய அணியின்

கேப்டனாக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது

இந்திய டி20 அணியின் புதிய கேப்டனாக

சூர்யகுமார் யாதவை பிசிசிஐ அறிவித்துள்ளது

ஹர்திக் அணியில் இருந்தும்,

துணை கேப்டன் பதவி கூட சுப்மன் கில்லிற்கு வழங்கப்பட்டுள்ளது

இதனிடையே பிசிசிஐ கருத்து கேட்டபோது, “பாண்டியாவை விட சூர்யாவை தாங்கள் அதிகம் நம்புவதாகவும்

வசதியாக இருப்பதாகவும்” இளம் வீரர்கள் தெரிவித்துள்ளனர்

தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தின் போது சூர்யாவின் அமைதியான நடத்தை மற்றும்

வலுவான தகவல் தொடர்பு திறன் வீரர்களை கவர்ந்துள்ளது

பயிற்சியாளர் கம்பீர் மற்றும் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர்

சூர்யகுமாரை டி20 கேப்டனாக நியமித்ததாக கூறப்படுகிறது