சூப்பர் ஓவர் இல்லை; சமனில் முடிந்த முதல் ஒருநாள் போட்டி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி நேற்று கொழும்புவில் தொடங்கியது இதில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்தது 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 230 ரன்கள் குவித்தது அதிகபட்சமாக துணித் வெல்லாலகே 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார் பவுலிங்கில் அர்ஷ்தீப் சிங், அக்ஷர் படேல் இருவரும் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர் பின்னர் 231 ரன்களை இலக்காக கொண்டு இந்திய அணி பேட்டிங் செய்தது ரோகித் சர்மா 7 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 58 ரன்கள் எடுத்துக் கொடுத்து நடையை கட்டினார் 24 ரன்களில் விராட் கோலியும், 23 ரன்களில் ஷ்ரேயாஸ் ஐயரும் ஆட்டமிழந்தனர் இறுதியாக இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 230 ரன்கள் எடுத்தது