நடிகை தர்ஷா குப்தா உடை குறித்து சர்ச்சை பேச்சு...நடிகர் சதீஷூக்கு கடும் கண்டனம்..! ஓ மை கோஸ்ட் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நந்தம்பாக்கம் ட்ரேட் சென்டரில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் தர்ஷா குப்தா மாடர்ன் உடை அணிந்து வந்தார் அப்போது தர்ஷா குப்தாவின் ஆடை குறித்து நடிகர் சதீஷ் விமர்சித்துள்ளார் பம்பாயில் இருந்து தமிழ் நாட்டுக்கு வந்த சன்னி லியோன் எப்படி ட்ரஸ் பண்ணியிருக்காங்க கோயம்புத்தூர்ல இருந்து தர்ஷா குப்தா வந்துருக்கு அவங்க எப்படி நம்ம கலாச்சாரத்துக்கு மாறிட்டாங்கன்னு சொல்ல வந்தேன் என அவர் பேசியிருந்தார் அவரின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது மூடர்கூடம் இயக்குநர் நவீன் தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து விமர்சித்துள்ளார் பெண்களின் தனிப்பட்ட உரிமைக்கு, பலரும் குறல் கொடுத்து வருகின்றனர்