RRR திரைப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு நேற்று சென்னையில் நடைபெற்றது


நிகழ்வில் ராஜமௌலி, ஜூனியர் என்டிஆர், ராம் சரண்
ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்



சிறப்பு விருந்தினர்களாக தமிழ் நடிகர்கள் சிவகார்த்திகேயன், உதயநிதி ஸ்டாலின்



தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு மற்றும் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்


கொரோனா பரவலுக்கு பிறகு வருடத்தின் முதல் பெரிய படமாக RRR படமும்
அடுத்ததாக அஜித் சாரின் வலிமை படமும் வெளியாக இருக்கிறது


தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில்
பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு கீரவாணி (மரகதமணி) இசையமைத்துள்ளார்


இந்தப் படத்தின் மூன்று பாடல்களும், ட்ரெய்லரும் வெளியாகி
ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது


எஸ்.எஸ்.ராஜமௌலி தனது முந்தைய படங்கள் தமிழ்நாட்டில்
இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றதற்காக தனது நன்றியைத் தெரிவித்தார்