முதலில் 200 கிராம் முந்திரியை இரண்டு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும் இதை மிக்ஸியில் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும் அடுப்பில் கடாயை வைத்து 200 கிராம் சர்க்கரை சேர்க்க வேண்டும் சர்க்கரையில் மூன்றில் ஒரு பங்கு தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்ச வேண்டும் பாகு பதம் வந்ததும் அரைத்த முந்திரியை இதில் சிறிது சிறிதாக சேர்த்து கிளற வேண்டும் தலா ஒரு சிட்டிகை ஏலக்காய் பொடி, குங்குமப்பூ சேர்த்து, அரை கப் நெய் சேர்க்க வேண்டும் கைவிடாமல் கிளறி விட்டு கெட்டிப் பதம் வந்ததும் இறக்கி விட வேண்டும் இந்த கலவையை நெய் தடவிய தட்டில் பரப்பி சதுர வடிவில் வெட்டி விட வேண்டும் சூடு ஆறியதும் கேக்கை எடுத்து பரிமாறலாம் தேவைப்பட்டால் கேக் சூடாக இறக்கும் போதே பாதாம் பிஸ்தா பொடியால் அலங்கரிக்கலாம்