கர்நாடக இசை கலைஞர் மற்றும் பாடகி பாம்பே ஜெயஸ்ரீ மின்னலே திரைப்படத்தில் 'வசீகரா' பாடல் மூலம் பிரபலமானவர் தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் மொழி திரைப்படங்களிலும் பாடியுள்ளார் சங்கீத கலாநிதி விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் இன்று மாலை லிவர்பூல் பல்கலைக்கழகத்தில் பாம்பே ஜெயஸ்ரீ இசை நிகழ்ச்சி நடைபெறவிருந்தது இந்த நிலையில் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் கீ ஹோல் அறுவை சிகிச்சை நடைபெற்றுவருவதாக கூறப்படுகிறது