ரிசர்வ் வங்கி 5 ஆண்டுகளுக்குப் பிறகு ரெப்போ வட்டி விகித்தத்தில் திருத்தம் செய்துள்ளது.
ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா, நிதியியல் கொள்கை குழு ஒருமனதாக ரெப்போ வட்டி விகிதத்தை குறைக்க முடிவு செய்துள்ளதாக” அறிவித்தார்.
அதன்படி குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் 6.5% இருந்து 6.25%-ஆக குறைக்கப்பட்டுள்ளது.
கடந்த 11 முறையும் வட்டி விகிதம் மாற்றப்படாத நிலையில் இம்முறை வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.
சஞ்சய் மல்ஹோத்ரா ரிசர்வ் வங்கி ஆளுனராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.
பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் முயற்சியில் வட்டி விகித குறைப்பு மேற்கொள்ளப்பட்டது.
ரெப்போ வட்டி விகிதம் குறைவதால் வீட்டுக் கடன் மற்றும் கார் கடன் பெற்றவர்களுக்கு வட்டி விகிதம் குறையும். இதனால் அவர்கள் செலுத்தும் தவணை தொகை குறையும்.
இதனால் பொருளாதாரத்தில் பண விநியோகம் அதிகரிக்கிறது, பணப்புழக்கம் வலுப்படுகிறது. கடன் வாங்குவதை ஊக்குவிப்பதோடு நுகர்வோர் தேவையையும் அதிகரிக்கிறது.
அதோடு சஞ்சய் மல்ஹோத்ரா வெளியிட்ட அறிக்கையில், ’2026 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இலக்கை 6.6% லிருந்து 6.7% ஆக உயர்த்தியுள்ளது’ என குறிப்பிடப்பட்டுள்ளது.