தாய்ப்பால் கொடுப்பதால் தாய்க்கும் குழந்தைக்கும் பல நன்மைகள் கிடைக்கும் இது இருவருக்கும் இடையே பிணைப்பை உருவாக்க உதவுகிறது புதிதாகப் பிறந்த குழந்தையை ஒவ்வாமை மற்றும் நோய்களிலிருந்து பாதுகாக்கிறது தாய்பாலில், குழந்தையின் வளர்ச்சிக்கு உதவும் வைட்டமின்கள், புரதம் மற்றும் கொழுப்புகள் நிறைந்துள்ளது நோய் எதிர்ப்பு சக்தியை அதிககரிக்க உதவும் தேவையான ஆன்டிபாடிகளும் உள்ளன தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு காது நோய்த்தொற்றுகள்,சுவாச நோய் குறைவாக இருக்கும் தாய்ப்பால் எளிதில் ஜீரணமாகும் ஆறு மாதம் கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள் உலக சுகாதார அமைப்பும், குறைந்தது ஆறு மாத காலம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று கூறுகிறது இரண்டு வருடங்கள் அல்லது அதற்கு மேலும் தாய்ப்பால் கொடுக்கலாம்