தாய்ப்பால் கொடுப்பதால் பல நன்மைகள் உள்ளது இதன் மகத்துவை கொண்டாட உலக தாய் பால் வாரம் அனுசரிக்கப்படுகிறது ஆகஸ்ட் 1 -7 வரை உலக தாய்ப்பால் வாரமாக கொண்டாடப்படுகிறது இதனால் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு முகாம்கள் நடந்து வருகிறது தற்போது AI தொழில்நுட்பம் மூலம் மார்பக புற்றுநோயை எளிதாக கண்டறியலாம் என ஆய்வு தெரிவித்துள்ளது இந்த ஆய்வுக்கட்டுரை ‘தி லென்செட் ஆன்காலஜி’ என்ற பத்திரிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது 40-80 வயதிலான ஸ்வீடன் நாட்டை சேர்ந்த பெண்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது இந்த AI ஆதரவு கொண்ட மேமோகிராஃபி பகுப்பாய்வு, சரியான முடிவுகளை கொடுத்துள்ளது AI ஆதரவு கொண்ட மேமோகிராஃபி பகுப்பாய்வு செய்ய ஒரு கதிரியக்க நிபுணர் கட்டாயம் இருக்க வேண்டும் இந்தியா போன்ற நாடுகளில், இந்த தொழில்நுட்பம் உதவிகரமாக இருக்கும்