பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் பஹரைனில் இலங்கை தம்பதிகளுக்கு மகளாக பிறந்தார். சினிமா துறையில் கால்பதிப்பதற்கு முன்பாக இவர் ஒரு தொலைக்காட்சியில் செய்தியாளராகவும் பணியாற்றியுள்ளார். உணவு மேல் இவருக்கு அதிக ஆர்வம் இருந்தாலும் டயட் விஷயத்தில் அதிக கவனம் செலுத்தும் நபராக ஜாக்குலின் இருந்து வருகிறார். இவருக்கு இந்தி, அரேபிக், பிரஞ்சு, ஸ்பானிஷ் உள்ளிட்ட பல மொழிகளில் பேச தெரியும். நடிகை ஜாக்குலினிற்கு நடிகர் சல்மான் கான் மும்பை பாண்ட்ராவில் 3 அடுக்கு வீட்டை பரிசாக தந்தாக ஒரு தகவல் உள்ளது. எனினும் அவர் அதை மறுத்து வருகிறார். இவர் முதலில் பஹரைன் நாட்டின் இளவரசர் பின் ரஷீத் அல் கலிஃபாவை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. நடிகை ஜாக்குலினிற்கு குதிரை ஏற்றம் என்றால் அவ்வளவு பிடிக்குமாம். தன்னுடைய ஓய்வு நேரத்தில் அந்த விளையாட்டில் இவர் அதிகம் ஈடுபடுவார். இவருக்கு இயற்கை உணவு, இசை உள்ளிட்டவற்றில் அதிக ஆர்வம் உடற்பயிற்சியில் இவருக்கு அதிக ஈர்ப்பு இருக்கிறது இவர் 2006ஆம் ஆண்டு இலங்கை நாட்டின் பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்று இருந்தார்.