நாம் உடல் நலத்துடன் வாழ வேண்டும் என்றால் நாம் விடும் மூச்சும் சிறப்பானதாக இருக்க வேண்டும் ஒரு நாளில் அரைமணி நேரமாவது மூச்சுப்பயிற்சிக்கு நேரம் ஒதுக்க வேண்டும் மூச்சு பயிற்சி செய்யும் போது வயிறு காலியாக இருக்க வேண்டும் மூச்சுப்பயிற்சியில் பல வகைகள் உள்ளன மூச்சு பயிற்சி கட்டுப்பாட்டினால் நம் உடலுக்கு அனைத்து விதமான நன்மைகளும் கிடைக்கும் இரத்த அழுத்தம் குறையலாம் சர்க்கரை அளவு கட்டுப்படலாம் நுரையீரல் பலம் பெறவதால் இது வாழ்நாட்களை நீட்டிக்க உதவலாம் உடல் எடையும் குறைய வாய்ப்புள்ளது மூளை சுறுசுறுப்பாக செயல்பட உதவலாம்