மலையாளத்தில் ஹிட் ஆன படம் 'பெங்களூர் டேஸ்' அஞ்சலி மேனன் இயக்கியுள்ள படம் இது நஸ்ரியா, துல்கர் சல்மான், நிவின் பாலி, உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர் ஃபீல் குட் படமான இது, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது இப்படம் தமிழிலும் ரீ-மேக் செய்யப்பட்டது அதில் ஸ்ரீதிவ்யா, ஆர்யா, பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடித்து இருந்தனர் பெங்களூர் டேஸ் அளவிற்கு இப்படம் ஹிட் ஆகவில்லை தற்போது, இப்படம் ஹிந்தியில் ரீ-மேக் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இதில் பிரியா வாரியர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் இன்னொரு மலையாள நடிகையான அனஸ்வரா ராஜனும் இப்படத்தில் நடிக்கவுள்ளார்