சாலட் முதல் டெஸர்ட் வரை அவகேடோவை கொண்டு ஏராளமான உணவுகளை தயார் செய்யலாம். சுவை நிறைந்த இந்த அவகேடோ பழத்தில் 20 வகையான வைட்டமின்களும் தாதுக்களும் நிறைந்துள்ளன. இதை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால் சருமம் பளபளப்பாகவும், முடியின் வளர்ச்சி அற்புதமாகவும் இருக்கும். அவகேடோவில் ரிபோஃப்ளேவின், நியாசின் , ஃபோலேட், பாந்தோதெனிக் அமிலம் மெக்னீசியம் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. இதில் லுடீன், பீட்டா கரோட்டின் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இதயம் தொடர்பான நோய்களின் அபாயத்தை குறைக்கலாம். அவகேடோவில் நிறைந்துள்ள நார்ச்சத்து உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும் அவகேடோவில் நிறைந்துள்ள வைட்டமின் C எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் குறைந்த அளவு கலோரி மட்டுமே உள்ளது.