ரூ90 ஆயிரம் வரை தள்ளுபடி... Wagon R முதல் Swift வரை.. பட்ஜெட் கார்களுக்கு மாருதி சுசுகி மெகா ஆஃபர்!

மாருதி சுசுகி நிறுவனம் தன்னுடைய பட்ஜெட் கார்களுக்கு ஜுலை மாத தள்ளுபடியை அறிவித்துள்ளது.

Published by: ABP NADU

இந்தியாவின் புகழ்பெற்ற கார் நிறுவனம் மாருதி சுசுகி நிறுவனம். மாருதி நிறுவனம் தனது கார்களுக்கு ஜுலை மாத தள்ளுபடியை அறிவித்துள்ளது. எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு தள்ளுபடி?

என்று அறிவித்துள்ளது என்பதை கீழே காணலாம்.

Maruti S-Presso

ரூபாய் 37 ஆயிரத்து 500

Maruti Alto K10

ரூபாய் 52 ஆயிரத்து 500

Maruti Tour H1

ரூபாய் 50 ஆயிரம்

Maruti Celerio

ரூபாய் 37 ஆயிரத்து 500

Maruti Wagon R

ரூபாய் 52 ஆயிரத்து 500

Maruti Tour H3

ரூபாய் 70 ஆயிரம்

Maruti Eeco

ரூபாய் 37 ஆயிரத்து 500

Maruti Swift

ரூபாய் 45 ஆயிரம்

Maruti Tour S

ரூபாய் 25 ஆயிரம்

Maruti Brezza

ரூபாய் 55 ஆயிரம்

Maruti Victoris

ரூபாய் 90 ஆயிரம்

பட்ஜெட் கார்கள்

தற்போது தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ள Maruti S-Presso , Maruti Alto K10, Maruti Wagon R மற்றும் Maruti Swift ஆகிய கார்கள் பட்ஜெட் கார்கள் ஆகும்.அதிகளவு பயன்படுத்தப்படும் காரான வேகன்ஆர் காருக்கு ரூபாய் 52 ஆயிரத்து 500 தள்ளுபடியாக அளிக்கப்பட்டுள்ளது.

வாடகை கார்களுக்கும் ஆஃபர்

பட்ஜெட் விலை காரான Maruti S-Presso காருக்கு ரூபாய் 37 ஆயிரத்து 500 தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது. இந்த காரின் தொடக்க விலையே ரூபாய் 4.18 லட்சம் ஆகும். இந்த கார்களுக்கு முறையே ரூபாய் 50 ஆயிரம் மற்றும் ரூபாய் 70 ஆயிரம் வழங்கியுள்ளனர். டூர் வி காருக்கு ரூபாய் 50 ஆயிரம் தள்ளுபடி அளித்துள்ளனர்.

சுவிஃப்ட், விக்டோரிஸ்

இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 10.55 லட்சம் ஆகும். மாருதி சுசுகி நிறுவனத்தின் புகழ்பெற்ற காரான Maruti Victoris காருக்கு ரூபாய் 90 ஆயிரம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.