Maruti Dzire கார் ஒரு லிட்டருக்கு எத்தனை கிலோ மீட்டர் தூரம் செல்லும்?

Published by: ராஜேஷ். எஸ்

இந்த கார் ஒரு லிட்டருக்கு 24.79 கிலோமீட்டர் மற்றும் 5-ஸ்பீடு AMT வேரியண்ட் ஒரு லிட்டருக்கு 25.71 கிலோமீட்டர் வரை மைலேஜ் தருகிறது.

5 நட்சத்திர பாதுகாப்பு

இந்திய சந்தையில் மிகச் சில கார்களுக்கே இந்தச் சாதனை கிடைத்துள்ளது.

தினசரி பயன்பாட்டில் எரிபொருள் செலவைக் குறைக்க விரும்புவோருக்கு இந்த கார் பெஸ்ட் சாய்ஸ்.

டாப் வேரியண்டுகளில் 360 டிகிரி கேமரா

163 மி.மீ. கிரவுண்ட் கிளியரன்ஸ் இருப்பதால், சாதாரண இந்திய சாலைகளில் எந்த பிரச்சனையும் ஏற்படாது.

ISOFIX குழந்தை இருக்கை ஆங்கர்கள், ரியர் டிஃபாகர் போன்ற வசதிகள் உள்ளன.

CNG வேரியண்டில் ஒரு கிலோவுக்கு 33.73 கிலோமீட்டர் வரை மைலேஜ் கிடைக்கும்.

6 வேரியண்டி ஏர்பேக்குகள்

டிசையரில் உள்ள புதிய Z12E எஞ்சின் மைலேஜ் விஷயத்தில் சிறப்பாக இருந்தாலும், செயல்திறன் ரீதியாக சற்று ஏமாற்றத்தை அளிக்கிறது.

TPMS மற்றும் டே/நைட் IRVM போன்ற கூடுதல் அம்சங்களும் கிடைக்கின்றன.

AMT வேரியண்ட் 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை அடைய 15.21 வினாடிகள் எடுத்துக்கொள்வதும் இதற்கு ஒரு சான்றாகும்.

மாருதி டிசையரில் மற்றொரு சிறிய குறைபாடு பின் இருக்கை ஹெட்ரூம்.

குறிப்பாக உயரமானவர்களுக்கு மேல் பகுதியில் இடம் சற்று குறைவாகத் தோன்றும்.

உட்புறம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்தாலும், உயரமானவர்களுக்கு இது முழுமையாகப் பொருந்தாது.

இருப்பினும், அதிக செயல்திறனை விரும்புவோர் மற்றும் பின் இருக்கையில் அதிக ஹெட்ரூம் எதிர்பார்ப்பவர்கள் வாங்குவதற்கு முன் ஒருமுறை டெஸ்ட் டிரைவ் செய்து முடிவெடுப்பது நல்லது.

2025 மாருதி டிசையரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.6.26 லட்சம்.

சென்னையில் ஆன்-ரோடு விலை ரூ.7.51 - ரூ.11.17 லட்சம் வரை உள்ளது. மொத்தத்தில், மாருதி டிசையர் நல்ல மைலேஜ், சிறந்த பாதுகாப்பு.