டிவிஎஸ் ஆர்பிட்டர் Vs ஹோண்டா ஆக்டிவா - இரண்டில் எந்த EV பெஸ்ட்?

Published by: குலசேகரன் முனிரத்தினம்

டிவிஎஸ் ஸ்கூட்டர் இளைஞர்களை இலக்காகக் கொண்டு வடிவமைக்கப்பட்டது. ஆனால் ஹோண்டா ஆக்டிவா குடும்பப் பயனாளர்களை இலக்காகக் கொண்டது

ஹோண்டா ஆக்டிவாவில் மாற்றக்கூடிய பேட்டரிகள் உள்ளன. டிவிஎஸ் ஆர்பிட்டரில் நிலையான பேட்டரி பேக் அல்லது அதிக திறன் கொண்ட நீக்கக்கூடிய பேட்டரிகள் வழங்கப்படுகின்றன

டிவிஎஸ் ஒருமுறை சார்ஜ் செய்தால் 130 முதல் 140 கிலோமீட்டர் வரை சான்றளிக்கப்பட்ட வரம்பை வழங்குகிறது ஹோண்டா ஆக்டிவா 100க்கும் மேற்பட்ட கிமீ வரம்பை வழங்குகிறது

டிவிஎஸ் ஆர்பிட்டரின் அதிகபட்ச வேகம் 85 கிலோமீட்டர். ஹோண்டா ஆக்டிவாவின் அதிகபட்ச வேகம் 75 முதல் 80 கிலோமீட்டர்கள் மட்டுமே

டிவிஎஸ் ஆர்பிட்டர் வெறும் 1.5 மணிநேரத்தில் 80 சதவீதம் சார்ஜ் ஆகும். ஹோண்டா ஆக்டிவா இ பேட்டரிகளை மாற்ற வேண்டியிருக்கும்

ஆர்பிட்டரில் ஒரு பெரிய ஹெல்மட்டை வைக்கும் அளவிற்கு சீட்டிற்கு கீழே பூட் ஸ்பேஸ் உள்ளது. ஆனால், ஆக்டிவாவில் அவ்வளவு இல்லை

இரண்டு பைக்குகளிலும் காம்பி பிரேக்கிங் சிஸ்டம் அல்லது வேரியண்ட்டைப் பொறுத்து முன் டிஸ்க் பிரேக் ஆப்ஷன் இருக்கும்

இரண்டு ஸ்கூட்டர்களிலும் முன்புறம் டெலஸ்கோபிக் ஃபோர்க்குகள் பின்புறம் மோனோ ஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்படும்

ஆக்டிவா EV விலை ரூ.1.35 முதல் ரூ.1.5 லட்சம் வரை உள்ளது. டிவிஎஸ் ஆர்பிட்டர் ரூ.1.4 லட்சம் முதல் ரூ.1.65 லட்சம் வரை உள்ளது