265 கி.மீ., மைலேஜ் தரும்.. சிம்பிள் ஒன் vs ஹோண்டா ஆக்டிவா இ - எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் எது பெஸ்ட்?

Published by: ராஜேஷ். எஸ்

சிம்பிள் ஒன் ஸ்கூட்டர் பெரிய 5.0kWh நிலையான நீக்கக்கூடிய பேட்டரி அமைப்புடன் வருகிறது. ஹோண்டா ஆக்டிவா இ மாடல் இரண்டு நீக்கக்கூடிய பவர் பேக் பேட்டரிகளுடன் இயங்குகிறது.

சிம்பிள் ஒன் ஒருமுறை சார்ஜ் செய்தால் 265 கிலோமீட்டர் தூரம் செல்லும், ஆக்டிவா இ முழு சார்ஜில் சுமார் 102 கிலோமீட்டர் தூரம் மட்டுமே வழங்கும்.

சிம்பிளின் அதிகபட்ச வேகம் 115 கிலோமீட்டர்கள் ஆகும். அதேசமயம் நகர சவாரிக்கு ஏற்ற ஹோண்டா ஆக்டிவா ஐ இன் அதிகபட்ச வேகம் 80 கிலோமீட்டர்கள் ஆகும்

சிம்பிள் ஒன் வெறும் 2.55 வினாடிகளில் 40 கிலோமீட்டர் வேகத்தை எட்டும். ஆக்டிவா இ பிக்கப் மிகவும் மென்மையாகவும் சீராகவும் இருக்கும்.

சிம்பிள் ஒன்னை வீட்டிலேயே சார்ஜ் செய்ய 5 மணி நேரம் 20 நிமிடங்கள் ஆகும். ஆக்டிவா இ பேட்டரிகளை வெளியே எடுத்து சார்ஜ் செய்யலாம் அல்லது ஸ்வாப் செய்யலாம்

சிம்பிள் ஒன் ஸ்போர்ட்டி ஷார்ப் ஃபியூச்சரிஸ்டிக் கட் இளைஞர்களை கவரும் வகையில் இருக்கும். ஆக்டிவா பாரம்பரிய பெட்ரோல் ஆக்டிவா வடிவமைப்பை ஒத்திருந்து கிளாசிக் குடும்ப தோற்றத்தைக் கொண்டுள்ளது.

சிம்பிள் ஒன் இருக்கைக்கு அடியில் ஹெல்மெட் வைப்பதற்கு போதுமான விசாலமான பூட் ஸ்பேஸ் உள்ளது. ஆக்டிவா ஐ-இல் இடம் குறைவாக உள்ளது.

சிம்பிள் ஒன் டிஸ்க் பிரேக்குகளைக் கொண்டுள்ளது. ஆக்டிவா இ வேரியண்ட்டைப் பொறுத்து டிஸ்க் டிரம் பிரேக் ஆப்ஷன்களுடன் காம்பினேஷன் பிரேக்கிங் சிஸ்டத்துடன் வருகிறது.

சென்னையில் சிம்பிள் ஒன் ஆன்ரோடு விலை ரூ.1,99,650. ஆக்டிவா ரூ.1,22,800 ஆகும்.