மாருதி ஃபிரான்க்ஸ் ஃபேஸ்லிஃப்ட் ஆன்ரோடு விலை எவ்வளவு

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

மாருதி ஃப்ராங்க்ஸ் கூபே வகை எஸ்யூவி டிசைனுடன் வருகிறது. விடாரா போன்ற முன்பக்க தோற்றம் நல்ல தோற்றத்தை அளிக்கிறது

மாருதி ஃபிரான்க்ஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் தற்போது சோதனை கட்டத்தில் உள்ளது. இது 2026 நவம்பர் மாதத்திற்குள் சந்தைக்கு வரும்.

தற்போதைய மதிப்பீடுகளின்படி இந்த ஃபிராங்க்ஸ் ஆன் ரோடு விலை சுமார் 8,19,000 முதல் 15,04,000வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் நகர ஓட்டுதலுக்கு ஏற்ற 1.2எல் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் இன்ஜின் செயல்திறனை விரும்புபவர்களுக்காக 1.0 எல் டர்போ பூஸ்டர் ஜெட் இன்ஜின் உள்ளது.

அதிக மைலேஜ் விரும்புபவர்களுக்காக மாருதி இதில் சிஎன்ஜி விருப்பத்தையும் வழங்குகிறது. இதன் ஆன்ரோடு விலை 9.36 லட்சம் முதல் 10.70 லட்சம் வரை உள்ளது

இங்கு அதிகம் விற்பனையாகும் அடிப்படை வேரியண்ட் சிக்மாவின் ஆன்ரோடு விலை 8.26 லட்சம் முதல் 8.52 லட்சம் வரை இருக்கும்

டாப் வேரியன்ட் ஆல்பா டர்போ டிடி ஏடி விலை 14.73 லட்சம் முதல்15.04 லட்சம் வரை இருக்கும்

2026 ஃபேஸ்லிஃப்ட் மாடலின் எக்ஸ் ஷோரூம் விலை புதிய அம்சங்கள் காரணமாக 7 லட்சம் முதல் 12 லட்சம் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்த SUV டாடா நெக்ஸான், ஹூண்டாய் வென்யூ, மஹிந்திரா XUV 3XO, கியா சொனெட் போன்ற ஜாம்பவான்களுடன் போட்டியிடுகிறது.