1 லிட்டர் பெட்ரோலில் ஹோண்டா யூனிகார்ன் எவ்வளவு மைலேஜ் தரும்?

மிடில் கிளாஸின் ஆல் டைம் ஃபேவரைட் பைக் ஹோண்டா யூனிகார்ன் CB 160cc . இது ஒரு லிட்டருக்கு எவ்வளவு மைலேஜ் கொடுக்கும் என்பதை பார்க்கலாம்.

Published by: ராஜேஷ். எஸ்

ஹோண்டா யூனிகார்ன் CB 160cc இந்திய மார்க்கெட்டில் அதிகம் விற்பனையாகும் பைக் ஆகும்.

இது ஒரு லிட்டருக்கு 50–60 கி.மீ. மைலேஜை வழங்குகிறது.

சீரான பயண வேகத்தைப் பராமரித்தால், நெடுஞ்சாலைகளில் இந்த மைலேஜ் ஒரு லிட்டருக்கு 60 கி.மீ. வரை அதிகரிக்கக்கூடும்.

பெட்ரோல் டேங்க் கெப்பாசிட்டி 13 லிட்டர் ஆகும்.

டேங்க் ஃபுல் செய்தால் 600 முதல் 650 கி.மீ. வரை செல்லலாம்.

சென்னையில் ஆன்ரோடு விலை ரூ.1.37 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.

எக்ஸ் ஷோரூம் விலை ரூ.1.11 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது

கருப்பு, மெட்டாலிக் க்ரே, மெட்டாலிக் ரெட் ஆகிய மூன்று கலர்களில் வருகிறது.